எது நீதி?...எது அநீதி?...முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு தமிழிசை சரமாரி கேள்வி!
What is justice what is injustice tamilisai barrage of questions to chief minister mk stalin
ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த பாடலை தூர்தர்ஷன் அலுவலகத்தில் பணிபுரியும் 4 பெண்கள் பாடிய நிலையில், நீராருங் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் என்று தொடங்கி, மூன்றாவது வரியான தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் என்ற வரியை தவிர்த்து 4-வது வரியில் இருந்து பாடுவதை தொடர்ந்தனர்.
இந்த நிகழ்வு தமிழக அரசியலில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது.
இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் தாயை புறக்கணிப்பது நியாயமா? தமிழக முதல்வர் அண்ணன் மு.க ஸ்டாலின்
அவர்களே... அரசு விழாக்களில் தவறாமல் பாடப்படும் தமிழ் தாய் வாழ்த்தில் பாடியவர்களின் குறையில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று சொன்னவர்கள்... உங்கள் அரசு விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடாமலே குறை வைத்திருக்கிறீர்களே இந்தக் குறைக்கு நீங்கள் தானே பொறுப்பேற்க வேண்டும்.
குறை இல்லாமல் தமிழ் தாய் வாழ்த்து பாட வேண்டுமே தவிர.. தமிழ் தாய் வாழ்த்து பாடுவதையே குறைப்பது நியாயமா... பாடியதில் குறை கண்ட நீங்கள் பாடாமல் விடுவதே குறை என்று எண்ணவில்லையா.. குறையோடு பாடுவது அநீதி... அதற்காக..பாடாமல் இருப்பது நீதியா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
What is justice what is injustice tamilisai barrage of questions to chief minister mk stalin