தவெக மாநாட்டிற்கு சென்ற போது கோர விபத்து!...உளுந்தூர்பேட்டை அருகே 2 பேர் உயிரிழந்த சோகம்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள் காரணமாக விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள், தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர்.

மாநாட்டிற்கு அதிக கூட்டம் கூடுவார்கள் என்பதால், காலை 10 மணிக்கே மாநாட்டு திடல் திறக்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருச்சியில் இருந்து த.வெ.க மாநாட்டிற்கு வந்த தொண்டர்களின் கார் ஒன்று உளுந்தூர்பேட்டை அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை  இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், சாலை தடுப்பில் மோதிய கார் 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த கோர விபத்தில் திருச்சியை சேர்ந்த 35 வயதான கலை என்பவர் உள்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

When went to the tvk conference horrible accident 2 people died near ulundurpet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->