2026-ல் திமுக யாருடன் கூட்டணி?....இன்று திமுக பவள விழா பொதுக்கூட்டம்! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் இன்று  திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் நிலையில், இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர்  அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் தி.க தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, முக்குலத்தோர் புலிப்படை தலைவரான நடிகர் கருணாஸ் ஆகிய கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்துரை வழங்கி பேசு உள்ளனர்.

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவது குறித்த முக்கிய அறிவிப்பை,  முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பொதுக்கூட்டம் வரும் 2026-ம் ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் திமுகவின் இந்த வலுவான கூட்டணி தொடர வேண்டும் என்பதற்கான கால்கோள் விழா என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who will DMK alliance with in 2026 DMK coral festival public meeting today in Kanchipuram


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->