ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி அமைக்கப்போவது யார்?...தொடங்கியது வாக்கு எண்ணிக்கை! - Seithipunal
Seithipunal


ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் முதற்கட்டமாக காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும்  ஜம்முவில் 8 தொகுதிகள் என 24 தொகுதிகளுக்கு முதல் கட்ட சட்டசபை தேர்தல் கடந்த 18-ம் தேதி  நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின.

தொடர்ந்து 2ம் கட்ட சட்ட சபை தேர்தல் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. ஜம்முவில் 11 தொகுதிகள், காஷ்மீரில் 15 தொகுதிகள் என மொத்தம் 26 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில்  57.31 சதவீத வாக்குகள் பதிவாகின.

மேலும் 3-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் இந்த மாதம் 1-ம் தேதி நடைபெற்றது. இதில் 68.72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. காஷ்மீரில் ஒட்டுமொத்த வாக்கெடுப்பு சதவீதம் 63.45 சதவீதமாக உள்ளதாக  தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான வாக்குப்பதிவு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், காலை 7.30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், இன்று கலை 8 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணத் தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று மதியம் அல்லது மாலைக்குள் யார் ஆட்சியை பிடித்து முதலமைச்சர் ஆவார் என்பது தெரிந்து விடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who will form the government in jammu and kashmir the counting of votes has begun


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->