பாஜகவை தொடர்ந்து அவமதிக்கும் இபிஎஸ்.?! இதுதான் காரணமா.?!  - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈவேரா கடந்த ஜனவரி 4-ல் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது வரும் பிப்ரவரி 27 இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 

இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் இரண்டில் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஜனவரி 31 முதல் இன்று வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் சார்பில் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்களது தரப்பு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பின்வாங்கி உள்ளார்கள். 

இந்நிலையில் பாஜக அண்ணாமலை இன்று வெளியிட்ட அறிவிப்பில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து இருந்தார். இந்த ஈரோடு தேர்தல் ஆரம்ப கட்டத்தில் இருந்தே இபிஎஸ் பாஜகவை புறக்கணித்து வருகின்றார். இதற்கு காரணம் கடந்த சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது தான் வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்பட்டது.

எனவே இந்த இடைத்தேர்தலிலும் அவ்வாறு நடந்து விடக்கூடாது என்று இபிஎஸ் நினைப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில், பாஜக இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியும் அதற்கு இதுவரை எந்த ரெஸ்பான்சும் இல்லை. மேலும், அதிமுகவின் பேனர்களில் அல்லது மற்ற அறிவிப்புகளில் கூட பாஜகவினரின் புகைப்படம் இடம்பெறக் கூடாது என அதிமுக கெடுபிடி காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why eps continuesly ignore Bjp


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->