"எனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள ஆசை." ராகுல் காந்தியின் ஆசைப் பேச்சு.!  - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் மூத்த மகன் ராகுல் காந்தி. பாராளுமன்ற உறுப்பினரான இவர் காங்கிரஸின் தலைவராக பதவி வைத்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இரண்டு வருடம் பதவி வகித்தார்.

சமீபத்தில் இந்தியா முழுவதும் பாரத் ஜோதா யாத்ரா நடைபயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இதன் மூலம் நாடு முழுவதும் காங்கிரசுக்கு ஆதரவான அலைகளை  உருவாக்கினார் என்றால் அது மிகையாகாது. 

52 வயதான ராகுல் காந்திக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது அவரது திருமண வாழ்க்கை பற்றிய கேள்விகளும் அவரிடம் வந்து கொண்டே இருக்கின்றன சமீபத்தில் கூட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் "என் தாயைப் போன்ற ஒரு பெண் கிடைத்தால் நிச்சயமாக நான் திருமணம் செய்து கொள்வேன்" என்று கூறியிருந்தார்.

தற்போது நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை? என்று  தெரியவில்லை என கூறியிருக்கிறார் ராகுல் காந்தி. மேலும் குழந்தைகளை தான் மிகவும் விரும்புவதாகவும் தனக்கு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை இருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார் ராகுல். தனக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது தனக்கே விசித்திரமாக இருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why i dont get married is strange to me congress leader rahul gandhi in an interview


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->