கள்ளக்குறிச்சி விவகாரம் : இந்தியா கூட்டணியினர் அமைதி காப்பது ஏன் ? - பாஜக சரமாரி கேள்வி..! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி 57 பேர் உயிரிந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளனர். தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் தான். இந்த சம்பவத்தை நான் கண்டிக்கும் அதே வேளையில், எனக்கு ஒரு கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் தமிழக அரசே 'டாஸ்மாக்' கடைகளை நடத்தும்போது கள்ளக்குறிச்சியில் எப்படி சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் கிடைத்தது? பட்டியலின மக்கள் இந்த விவகாரத்தில் இறந்திருக்கும்போது காங்கிரஸ் ஏன் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை? இந்த வழக்கை சிபிஐ வசம் தான் ஒப்படைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பாஜக எம். பி சம்பித் பத்ரா பேசுகையில், "தமிழகத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள உயிரிழப்பு சம்பவம் ஒரு முக்கியமான பிரச்சினை. இந்த கள்ளச் சாராய விவகாரத்தில் 32 தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்துள்ளனர். இதை நான் கொலை என்றே சொல்வேன். 

மேலும் இந்த சம்பவத்தின் மூலம் என்று அறியப்படும் நபரின் சாராய கிடங்கு நகரின் மையப் பகுதியிலேயே அமைந்துள்ளது எப்படி சாத்தியம்? மேலும் அங்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அப்போது இந்த சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் உடந்தையா? இந்த விஷயத்தில் இந்தியா கூட்டணியினர் அமைதி காப்பது ஏன்?" என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why INDIA Alliance Leaders Kept in Silence in Kallakurichi Hooch Tragedy BJP Questioned


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->