ஏன் முஸ்லிம்களை மட்டும் குறி வைக்கிறீர்கள்?..மல்லிகர்ஜூன கார்கே.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே இரண்டு கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைப்பெற்று முடிந்த நிலையில், மூன்றாம்கட்ட தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வாரம் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி , முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபொது நாட்டின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமை என்று பேசியது பெரும் சர்ச்சையானது. இது குறித்து பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகர்ஜுன கார்கே , நாங்கள் பெரும்பான்மை உடன் வெற்றி பெற போவதை மோடி அறிந்து எங்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை முன் வைக்கிறார்.

முஸ்லீம்களுக்கு மட்டும்தான் குழந்தைகள் உள்ளதா , அனைவரது வீட்டிலும் குழந்தைகள் உள்ளது. ஒன்றை மட்டும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். பணம் இல்லாத ஏழை எளிய குழந்தைகள் அனைவருமே எங்கள் குழைந்தைகள்தான். பாஜக ஏன் முஸ்லிம்களை மட்டும் குறி வைக்கிறீர்கள். முஸ்லீம்களும் இந்தியர்கள்தான் அவர்கள் நம் சகோதர்கள் . எக்காரணம் கொண்டும் நாட்டை உடைக்க விடமாட்டோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Why targeting only Muslims Mallikarjuna Karke


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->