உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷ்! பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வாழ்த்து!    - Seithipunal
Seithipunal


சிங்கப்பூரில் நடைபெற்று வந்த FIDE உலக சதுரங்க வாகையர் பட்டப் போட்டிகளின் 14-ஆம் ஆட்டத்தில், சீனத்தைச் சேர்ந்த தற்போதைய வாகையர்   டிங் லிரெனை  வீழ்த்தி  வாகையர் பட்டத்தை வென்றிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குகேஷுக்கு, பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "18 வயதில் இந்த பட்டத்தை வென்றதன் மூலம், கேரி காஸ்பரோவின் சாதனையை முறியடித்து உலகின் இளம் வயதில்  உலக சதுரங்க வாகையர் பட்டத்தை வென்றவர் என்ற புதிய சாதனையை உருவாக்கியுள்ளார்.  

இதன் மூலம் தமிழ்நாடு தான் சதுரங்க  வாகையர்களின் விளைநிலம் என்பதை  மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறார்.  சதுரங்க உலகில் ஏற்கனவே கிராண்ட் மாஸ்டர் பட்டத்தையும் வென்றுள்ள குகேஷ் மேலும் பல பட்டங்களை வெல்லவும், சாதனைகளைப் படைக்கவும்  எனது வாழ்த்துகள்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Chess Championship Gukesh Dommaraju PMK Anbumani Ramadoss Wish


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->