பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த உலகத் தலைவர்கள்! - Seithipunal
Seithipunal


நடந்து முடிந்த இந்திய பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி 296 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதில் பாஜக மட்டும் 240 இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமையவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு உலகத்தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மற்றும் அண்டை நாடுகளான மொரீஷியஸ் மற்றும் பூடான் நாட்டின் தலைவர்கள் ஆகியோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இந்த தலைவர்கள் தங்களது எக்ஸ் வலைத்தளத்தில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து 3வது முறை வெற்றி பெறும் இந்திய பிரதமர் மோடி தலைமையிலான இந்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தலை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அரசாங்கத்திற்கும், இந்த தேர்தலில் வாக்களிக்க உற்சாகமாக பங்கேற்ற இந்திய வாக்காளர்களுக்கும் எங்கள் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று உலகத்தலைவர்கள் பலரும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இந்தியாவுக்கும், இத்தாலிக்கும்  இடையேயான உறவை  மேம்படுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் இத்தாலி அரசு மேற்கொள்ளும் என்று தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார். 

இதையடுத்து வாழ்த்து தெரிவித்துள்ள அனைத்து உலகத்தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

World Leaders Wishes PM Modi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->