இன்று காலை எடப்பாடி பழனிச்சாமி குறித்து வெளியான செய்தி... மறுப்பு தெரிவித்து பரபரப்பு அறிக்கை.!
YashwantSinha jairamramesh EPS AIADMK
எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவருக்கான வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிக்க கோரி, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ராகுல் காந்தி போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று காலை சில நாளிதழ்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போன் மூலம் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு, எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு அளிக்க கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"ராகுல் காந்தி எடப்பாடி பழனிசாமி தொடர்பு கொண்டதாக கூறும் தகவல் தவறானது. யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு கூற வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சி வலுவாக உள்ளது. இதனை முடக்குவதற்காக சிலர் இது போல் செய்கின்றனர்" என்று இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
YashwantSinha jairamramesh EPS AIADMK