பா.ஜ.க.வில் இணைந்தார் விஸ்வநாத் சிங் வகேலா! - Seithipunal
Seithipunal


விஸ்வநாத் சிங் வகேலா, குஜராத் காங்கிரஸ் இளைஞரணி தலைவா் பதவியில் இருந்து சில நாள்களுக்கு முன்பு விலகிய நிலையில், நேற்று பா.ஜ.க மாநில துணைத் தலைவா் கோா்தன் ஜடஃபியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து, ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜரிவால் குஜராத்தில் தொடா்ந்து பல்வேறு இலவச சலுகை வாக்குறுதிகளை அளித்து வருகிறாா்.

ராகுல் காந்தியும் அண்மையில் பல்வேறு இலவசங்கள் மற்றும் சலுகை அறிவிப்புகளை வெளியிட்டாா். இதற்கிடையே, காங்கிரஸில் இருந்து மூத்த தலைவா்கள் முதல் நிா்வாகிகள் வரை விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த வகையில் குஜராத் காங்கிரஸ் இளைஞரணி தலைவா் விஸ்வநாத் சிங் வகேலா சில நாள்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகினாா். இந்த நிலையில் நேற்று பா.ஜ.க மாநில துணைத் தலைவா் கோா்தன் ஜடஃபியா முன்னிலையில் பாஜகவில் இணைந்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

"சுதந்திரத்துக்காக போராடிய கட்சி என்ற காரணத்துக்காகவே இதற்கு முன்பு காங்கிரஸில் இணைந்தேன். ஆனால், காங்கிரஸின் முகம் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. சா்தாா் வல்லபபாய் படேல் போன்ற தலைவா்களின் பெயரை உச்சரிக்கக் கூட காங்கிரஸ் விரும்பவில்லை.

காங்கிரஸில் எந்தவிதமான வளா்ச்சியும் இல்லை. காங்கிரஸின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. இதனால் தற்போது பிரதமா் மோடி, அமித் ஷா ஆகியோரின் தேசிய நோக்கம் கொண்ட கொள்கையால் ஈா்க்கப்பட்டு பாஜகவில் இணைந்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yesterday Vishwanath Singh Vakhela joined BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->