சந்திரபாபு கைதை ஸ்வீட் எடு கொண்டாடு! குதூகலத்தில் அமைச்சர் ரோஜா! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 2019 ஆம் ஆண்டு இளைஞர் திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் தொடங்கப்பட்ட திட்டத்தில் அவர் 118 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில சிறப்பு புலனாய்வு போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு இன்று விஜயவாடா லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த விஜயவாடா லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றம் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் நாளை தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அமைச்சரும் நடிகையுமான ரோஜா தனது ஆதரவாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

YSR minister roja celebrating Chandrababu Naidu arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->