ஜாக்கெட் வாங்க போன 4வது கணவன்! நகையுடன் கம்பி நீட்டிய புது மனைவி 2வது கணவனுடன் கைது! - Seithipunal
Seithipunal


சென்னையில் அருகே திருமணமான 20 நாளில் நகை பணத்துடன் மாயமான பெண்ணை, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் வெளியான தகவலின் படி, ஆடம்பர வாழ்க்கைக்கும், உல்லாச வாழ்க்கைக்கும் ஆசைப்பட்ட அபிநயா என்ற பெண், மன்னார்குடி, சிவகங்கை, கேளம்பாக்கம் பகுதிகளை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்துள்ளார்.

தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வரும் அபிநயா, அண்மையில் நான்காவதாக தாம்பரத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து உள்ளார் .

இந்த நிலையில், நான்காவது கணவன் ஜாக்கெட் வாங்குவதற்காக கடைக்கு சென்ற கேப்பில், அபிநயா வீட்டில் இருந்த நகை, பணத்துடன் தலைமறைவாகி உள்ளார்.

இது குறித்து அபிநயாவின் நான்காவது கணவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அபிநயாவின் செல்போனை செல்போன் என்னை வைத்து கைது செய்துள்ளனர்.

தாம்பரம் பகுதியில் திருடிய நகையை தனது இரண்டாவது கணவருடன் விற்பனை செய்ய முயன்ற போது, அபிநயாவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

மேலும் அவரிடம் இருந்த நகை, பணம், 32 சிம்கார்டுகள், செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அபிநயாவின் வலையில் இன்னும் எத்தனை ஆண்கள் சிக்கி உள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Fraud Young Lady marriage 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->