#இந்தியா || கணவர் பாலியல் உறவுக்கு அழைத்து, அதற்க்கு மனைவி...., வெளியான புள்ளி விவரம்.! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேசிய குடும்ப நல ஆய்வு அறிக்கையில் உள்ள முக்கியமான 5 விவரங்களை வெளியிட்டுள்ளார். 

ஆண் பெண் பாலியல் சுதந்திரம் மற்றும் சமத்துவம் சார்ந்த கேள்விகளும் முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது. இதில்,

"கணவர் பாலியல் உறவுக்கு அழைக்கும் போது மனைவி மறுப்பு தெரிவிக்க சுதந்திரம் உள்ளதா" என்ற கேள்விக்கு, 82% மனைவிகள் 'ஆம்' சுதந்திரம் உள்ளது என்று பதிலளித்துள்ளார்.

கோவாவைச் சேர்ந்த பெண்கள் அதிகபட்சமாக 92 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

அருணாசல பிரதேச பெண்கள் குறைந்தபட்சமாக 63 சதவீதம் பேர் ஆம் என்று பதிலளித்துள்ளனர்.

மேலும் அந்த அறிக்கையில், பெண்கள் பாலியல் உறவுக்கு மறுக்கும் போது அதற்கு ஆண் 

* கோபம் கொள்வது,
* அப்பெண்ணுக்கு பொருளாதார ரீதியாக உதவி வழங்க மறுப்பது, 
* அவர்களை துன்புறுத்துவது,
* தெரிந்தே வேறு பெண்ணிடம் உறவு கொள்வது 

போன்ற நான்கு நடவடிக்கையில் ஈடுபட்டால் அதனை நீங்கள் ஏற்பீர்களா? என்று பெண்களிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, 72 சதவீத பெண்கள் மேற்கண்ட நான்கில் எதையும் ஏற்க மாட்டோம் என்று பதிலளித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDIAN HUSBAND AND WIFE Some Survey


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->