விவாகரத்து பெறவில்லை என்றாலும், இரண்டாவது கணவரிடம் ஜீவனாம்சம் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றம், முதல் கணவரிடம் இருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறவில்லை என்றாலும், இரண்டாவது கணவரிடம் ஜீவனாம்சம் கோர பெண்ணுக்கு உரிமை உள்ளதென தீர்ப்பு வழங்கியது.  

தெலங்கானாவைச் சேர்ந்த பெண், தனது முதல் கணவரை பரஸ்பர ஒப்பந்தத்துடன் பிரிந்த பின்னர், இரண்டாவது திருமணம் செய்து பெண் குழந்தை பெற்றார். பின்னர், இரண்டாவது கணவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் எதிர்த்து வரதட்சிணை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தார். மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125-ன் கீழ், தன்னையும் மகளையும் பொருளாதாரமாக ஆதரிக்க இரண்டாவது கணவரிடம் ஜீவனாம்சம் கோரினார்.  

குடும்ப நல நீதிமன்றம், ஜீவனாம்சம் வழங்க இரண்டாவது கணவருக்கு உத்தரவிட்டது. ஆனால், மாநில உயர்நீதிமன்றம், ‘முதல் திருமணம் செல்லுபடியாகவே உள்ளதால் இரண்டாவது திருமணம் அமலுக்கு வராது’ எனக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்தது.  

இதை எதிர்த்து பெண் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள், ‘திருமணத்தால் கிடைக்கும் உரிமைகள் மட்டுமல்ல, கடமைகளும் உள்ளன. கணவன் தன் பொறுப்புகளை தவிர்க்க முடியாது’ எனத் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், இரண்டாவது கணவர் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SC Case Judgement


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->