தஞ்சை பெரிய கோவில் பற்றிய காணொளி பகிர்ந்த பிரபல தொழிலதிபர்! - Seithipunal
Seithipunal


சோழப் பேரரசின் சாதனை மற்றும் தொழில்நுட்பத்தை நாம் சரிவர உள்வாங்கவில்லை! 

இந்திய தொழிலதிபர்களில் சமூகவலைதளின் செம ஆக்டிவாக செயல்பட்டு கொண்டிருப்பவர் மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா. அவரது சோசியல் பகிர்வுகள் அனைத்தும் எப்பொழுதும் வைரலாகி கொண்டிருக்கும். புதிய கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவார். சில சமயங்களில் அந்த வடிவமைத்தலுக்கு அங்கீகாரம் அளித்து அதை தன் நிறுவனத்திற்காக வாங்கிக் கொள்வார்.

இப்பொழுது தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலையின் புகழை பற்றி வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார். இன்டீரியர் டிசைனர் ஸ்ரவண்யா ராவ் பிட்டி என்பவர் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேரடியாக சென்று அதன் கட்டிடக்கலை குறித்து விளக்கம் அளிக்கும் வீடியோவை ஆனந்த் மகேந்திரா பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் "11ஆம் நூற்றாண்டில் கட்டிய சோழர் கோவிலான பிரகதீஸ்வரர் கோயில் நாம் உள்ளோம். ராஜராஜசோழன் கட்டிய கோவில் இது. யூனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக இந்த கோவில் விளங்குகிறது. எந்த வித இயந்திரமும் இல்லாத அந்த காலத்தில் இந்த கோயிலை ஆறு கிலோமீட்டர் சாய்வு தளம் அமைத்து கோயில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. படம் வரைந்து அதன் அடிப்படையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. பேரண்டத்தின் இடது வலது குறித்து இந்த கோயில் பேசுகிறது. ஆறு பூதங்களை தாங்கி நிற்கிறது" என ஸ்வரண்யா வீடியோ பதிவில் தெரிவித்து இருந்தார்.

இந்த வீடியோ பதிவை பகிர்ந்த ஆனந்த் மகேந்திரா "ஸ்வரண்யா வழங்கியுள்ள அற்புதமான தகவல் அடங்கிய வீடியோ கிளிப் இது. சோழப்பேரரசின் சாதனை மற்றும் தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றத்தை நாம் சரிவர உள்வாங்கவில்லை என நினைக்கிறேன். இதன் வரலாற்று சிறப்புமிக்க நம் உலகிற்கு உரக்கச் சொல்லவில்லை" என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பலரும் வெவ்வேறு வகையான கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A famous businessman shared a video about Thanjavur Periya Kovil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->