இன்ஸ்டாவில் ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்.!! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டாவில் ட்ரெண்டாகும் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்.!!

சின்னத்திரை மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். தொடர்ந்து வெற்றிப்படங்களை ரசிகர்களுக்குத் தந்த சிவகார்த்திகேயன் தற்போது 'மாவீரன்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் அடுத்தமாதம் 14-ம் தேதி திரையில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். இதை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் 'மண்டேலா' திரைப்பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'அயலான்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல படங்களில் நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகள் உள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு ஒரு மகனும் பிறந்துள்ளார்.

அப்போது, சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக. என் பல வருட வலியை போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம்" என்று பதிவிட்டிருந்தார். அந்தக் குழந்தைக்கு தன் தந்தையின் பெயரையும் சேர்த்து குகன் தாஸ் என்று அவர் பெயரிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் தனது மகன் குகனின் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் 'நீ நடந்தால் நடை அழகு' என்று அதற்கு கேப்ஷனையும் சேர்த்துள்ளார். இந்த புகைப்படம் லைக்குகளை வாரிக் குவிப்பதுடன், சிவகார்த்திகேயன் ரசிகர்களால் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyen post son photo trend on instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->