100 நாளில் இரண்டு கோடி! முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   - Seithipunal
Seithipunal


100 நாளில் இரண்டு கோடி உறுப்பினர்களை அதிமுகவில் இணைத்திருப்பதாக, அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் தலைமையில், என்றென்றும் மக்கள் நலன் காக்கும் எஃகு  கோட்டையான அஇஅதிமுக -வில், 100 நாட்களில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் ( 2,00,31,000 as of 31/07/2023 ) சேர்ந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய அரசியல் கட்சி அஇஅதிமுக தான் என்று கழகத்திற்கு சிறப்பானதொரு அங்கீகாரத்தை வெகுஜன மக்கள் கொடுத்திருப்பதன் மூலம், கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மீது அவதூறு பழித்தவர்களுக்கு தமிழக மக்களே தக்க பதிலடி கொடுத்துள்ளார்கள்.

என்றென்றும் மக்கள் நலன் காக்கும் இயக்கம் அஇஅதிமுக!

யார் யார் எவ்வாறு பேசினும், இறைவன் அருளும், புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் ஆசியும் அண்ண்ன் எடப்பாடியார் அவர்களுக்கும், கழக உண்மை தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் எப்போதும் உண்டு" என்று எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK SP Velumani Announce ADMK Members list


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->