இந்திய தலைவர்கள் பலவீனமானவர்கள்! இந்தக் கூற்றை பொய்யாக்கிய ரிஷி சுனக்! - Seithipunal
Seithipunal


ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அடிமையாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியா சுதந்திரம் அடையும் பொழுது பேசிய கூற்றை நினைவு கூர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில் "கடந்த 1947 ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்தின் பொழுது இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பேசுகையில் "இந்திய தலைவர்கள் அனைவரும் திறன் குறைந்தவர்கள், பலவீனமானவர்கள்" என கூறியிருந்தார். ஆனால் இன்று சுதந்திரம் பெற்ற 75ம் ஆண்டில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இங்கிலாந்தின் பிரதமராக அதை பார்க்கிறோம் வாழ்க்கை அழகானது" என பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்தியா சுதந்திரம் அடையும் பொழுது இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் "இந்தியாவுக்கு சுதந்திரம் அளித்தால் அதிகார வஞ்சகர்கள், அயோக்கியர்கள், கொள்ளையர்கள் கைகளுக்கு செல்லும். இந்திய தலைவர்கள் அனைவரும் திறன் குறைந்தவர்கள், பலவீனமானவர்கள். அவர்கள் இனிமையாக பேசுபவர்கள். பகல் கனவு காண்பவர்கள். ஆட்சி அதிகாரத்திற்காக அவர்களுக்குள்ளே மோதிக் கொள்வார்கள். அரசியல் சண்டையில் இந்தியா ஒன்றும் இல்லாமல் போகும்" என பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரின் கூற்றை பொய்யாக்கும் வகையில் தற்பொழுது இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் ரிஷி சுனக் தற்பொழுது இங்கிலாந்தின் பிரதமராக பதவி ஏற்றதையொட்டி ஆனந்த் மகேந்திரா " அவருக்கு எதிராக பல தடைகள் வைக்கப்பட்டுள்ளன. வெற்றி பெற்றாலும் அல்லது தோல்வியடைந்தாலும் அது இவரின் திறமைக்கு ஈடாகாது. இந்த இளைஞன் சூப்பர் புத்திசாலி, மிகத் தெளிவாக மற்றும் அதீத கவனம் செலுத்துபவர் என இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பாராட்டியுள்ளார். இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anand Mahindra Twitter post going to viral


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->