இணையத்தில் ஆபாச படம் பார்பவரா நீங்கள்.? வெளியான அதிர்ச்சித் தகவல்.!
Are you watching porn on the internet Shocking information released
தற்போதைய காலகட்டத்தில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இணையத்தை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
தொழில்நுட்பம் பெருக பெருக ஏமாற்று வேலைகளும் பெருகிக்கொண்டே வருகின்றன. அந்த வகையில் பழைய ஏமாற்று வேலை ஒன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இதில் அதிகமாக ஏமாறுபவர்கள் யார் என்றால் இணையத்தில் பலான படங்களை பார்ப்பவர்கள் தான்.
இணையத்தில் பலான படங்களை பார்ப்பவர்களுக்கு 'browser has been locked' என்ற போலியான நோடிபிகேஷன் வருகிறது. மேலும், 173-279 என்ற சட்டத்தின் கீழ் உங்கள் கணினி லாக் செய்யப்படுகிறது. இதை அன்லாக் செய்ய 6 மணி நேரத்திற்குள் 3000 முதல் 29000 வரை பணம் செலுத்த கேட்கிறது. ஆனால், இது ஒரு ஏமாற்று வேலை இதை நம்ப வேண்டாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அவ்வாறு கேட்கும்போது ctrl+alt+delete மற்றும் end task கொடுத்து வெளியேறி விடுங்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், நீங்கள் இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
English Summary
Are you watching porn on the internet Shocking information released