டிக்டாக் பிரபலம் மேகா, 21 வயதில் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


கனடா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேகா தாகுர் திடீரென மரணமடைந்திருப்பது, அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது 21 வயதில் மேகா தாகுர் காலமாகியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கனடா டிக்டாக் பிரபலம் மேகா தாகுர், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 

இவர் டிக்டாக், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் அடிக்கடி விடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் பிரபலமானார். குறிப்பாக டிக்டாக்-ல் மட்டும் மேகாவை சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோ செய்கின்றனர்.

இன்ஸ்டாகிராமில் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மேகாவை ஃபாலோ செய்கின்றனர். பல நாடுகளை சேர்ந்தவர்களும் இவரின் வீடியோவை ரசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் 24ஆம் தேதி மேகா காலமாகியிட்டதாக அவரின் பெற்றோர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளனர். 

மேலும், மேகாவின் இறுதிச் சடங்கு நவம்பர் 29ஆம் தேதி அன்று நடந்துள்ளதாவும் தெரிவித்துள்ளனர். அவர் எவ்வாறு காலமானார் என்கிற தகவலை அவர்கள் குறிப்பிடவில்லை. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

canadian tiktok megha hakur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->