குழந்தை பெற்றுக்கொள்ள ஆண் துணையை நாடாத பெண் விலங்குகள்! இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!
Female animals that do not seek male partners to have children Want to see a list of names
உலகத்தில் இயற்கை எண்ணிலடங்கா அதிசயங்கள் நிறைந்துள்ளதாக இருக்கிறது. இயற்கையில் நாம் எதிர்பார்த்திறாத அளவு நிறைய விஷயங்கள் நுண்ணியதாகவும் பெரியதளவிலும் இருக்கின்றன. அந்த வகையில் சில வகை பெண் விலங்குகள் ஆண் விலங்குகளின் துணையின்றிக் குழந்தை பெற்றுக் கொள்ளும் திறனை இயற்கையாகவே பெற்றுள்ளது.
பைதான்ஸ் :
தெல்மா என்ற பெண் ரெட்டிகுலெட்டட் மலைப்பாம்புகள் இனச்சேர்க்கை இல்லாமலே முட்டையிடும் தன்மை கொண்டது. மேலும் ஒரு மலைப்பாம்பு 6 முட்டைகள் வரை இடக் கூடியது.

முதலைகள் :
முதலைகளும் பார்த்தினோஜெனிசிஸ் முறை மூலம் இனப்பெருக்கம் செய்து கொள்கிறது.
சுறாக்கள் :
சில வகை சுறா இனங்களில் பான்னெட்ஹெட் சுறா வகை மட்டும் பார்த்தினோஜெனிசிஸ் என்ற முறை மூலம் இனச்சேர்க்கை இல்லாமல் இனப்பெருக்கம் செய்கிறது.
கொமோடோ டிராகன்கள்:
இந்த கொமோடோ டிராகன்கள் துணை இல்லாமல் இனப்பெருக்கம் செய்யும் திறனை பெற்றுள்ளது. பெண் கொமோடோ டிராகன்கள் ஆண் துணையின்றி எளிதாக முட்டைகளை இடுகின்றன. மேலும் தேவைப்படும்போது தாங்களாகவே இனப்பெருக்கம் செய்யும் திறனை பெற்றுள்ளது.
கலிஃபோர்னியா காண்டோர்ஸ் :
கழுகு வகையை சார்ந்த கலிபோர்னியா காண்டோர்ஸ் ஆண் துணையின்றி இனப்பெருக்கம் செய்யும் திறனை பெற்றுள்ளது. மேலும் மரபணு சோதனையின் போது சில குஞ்சுகள் தாயின் மரபணுவை மட்டும் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.
கேப் தேனிக்கள் :
தேனி வகைகளில் கேப் தேனீக்கள் தெலிடோக்கி மூலம் இனப்பெருக்கம் செய்யும். இவை தனித்துவமான பாலினமற்ற இனப்பெருக்க முறையை அவை பின்பற்றுகின்றன.
அஃபிட்ஸ்:
பூச்சி வகைகளில் அஃபிட்ஸ் பூச்சி வகை, இனச்சேர்க்கை இல்லாமல் இனப்பெருக்கம் செய்யக்கூடிய உயிரியாகும். இந்த இனச்சேர்க்கை மூலம் அதன் தொகை யை விரைவாகப் பெருக்கிக் கொள்ளும்.
மார்மர்கிரெப்ஸ் :
நண்டு வகைகளில் ஒன்றான மார்மர்கிரெப்ஸ் அல்லது மார்பிள்டு வகை நன்று துணை இல்லாமல் இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இவை பாலின மக்கள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறது.
English Summary
Female animals that do not seek male partners to have children Want to see a list of names