இந்தியர்கள் வெட்கம்!!! சாலையோரம் கிடந்த குப்பைகளை சுத்தம் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்...!!!
Foreign tourists who cleaned up the garbage lying on the roadside
இந்தியநாட்டில் வடக்கு சிக்கிமில் உள்ள ஒரு கிராமத்தில் சாலையோரத்தில் கிடந்த குப்பைகளை டென்மார்க் சுற்றுலா பயணிகள் சுத்தம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுற்றுலா வந்த வெளிநாட்டு நபர்கள், அங்குள்ள யும்தாங்க் பள்ளத்தாக்கு பகுதிக்கு அங்கு சாலையோரம் குப்பைகள் கிடப்பதை கண்டனர்.
உடனே சிறிதும் முகசுழிவின்றி அந்த குப்பைகளை எடுத்து அப்புறப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது.
மேலும் உள்ளூர் மக்கள் அலட்சியமாக இருந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஒருவர் பதிவிட்டார்.
இது தற்போது மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Foreign tourists who cleaned up the garbage lying on the roadside