கையில் கத்தி, கஞ்சா! இன்ஸ்டா டம்மி வீராவை கைது செய்த போலீசார்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா அடிப்பதை குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருப்பாச்சூர் அந்தோனியார் நகரைச் சேர்ந்த வீரா என்ற இளைஞர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை நிர்வாணத்துடன் தோன்றி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், கையில் கத்தி மற்றும் கஞ்சாவை வைத்துக்கொண்டு, வாயில் வந்தபடி ஆபாச வார்த்தைகளை பேசி உள்ளார்.

இவ்வாறு அரை நிர்வாணத்துடன் கையில் கத்தி மற்றும் கஞ்சா என்று இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோவை வீரா பதிவு செய்துள்ளார்.

இது குறித்து புகாரின் பேரில் இளைஞர் வீரா-வின் மீது வழக்கு பதிவு செய்த திருவள்ளூர் மாவட்ட போலீசார், அவரை கைது நீதிமன்ற விசாரிப்புக்கு பின் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INSTA rowdy veera arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->