முடங்கிய இன்ஸ்டாகிராம் - அதிர்ச்சியில் பயணிகள்.!
instagram server down sudenly
சமூக வலைத்தளங்களில் பிரபலமான செயலியாக இன்ஸ்டாகிராம் விளங்குகிறது. இந்த செயலி பயனர்கள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிரவும், பிற பயனர்களுடன் தொடர்புகொள்ளவும் பயன்படுகிறது.
தற்போது மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த இன்ஸ்டாகிராம் கடந்த 2010-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலகளவில் இன்ஸ்டாகிராம் சேவையை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
உலகளவில் மற்ற நாடுகளை விட அமெரிக்கா, இந்தியா, பிரேசில், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இன்ஸ்டாகிராம் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்தியாவில் மட்டும் 2023-ம் ஆண்டு நிலவரப்படி சுமார் 229 மில்லியன் பயனர்கள் இன்ஸ்டா தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று மாலை இன்ஸ்டாகிராம் சிறுது நேரம் தடைப்பட்டதாக செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளமான டவுன்டிடெக்டர் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து 19,431- க்கும் மேற்பட்ட மக்கள் புகாரளித்த சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தது.
English Summary
instagram server down sudenly