திமுக திருடியதா?! வந்த தகவலை எல்லாம் வெளியிட்டால் உங்கள் நிலை என்ன? அமைச்சரை எச்சரிக்கும் அன்பழகன் MLA!
திமுக திருடியதா?! வந்த தகவலை எல்லாம் வெளியிட்டால் உங்கள் நிலை என்ன? அமைச்சரை எச்சரிக்கும் அன்பழகன் MLA!
கடந்த 16 ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில், மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த சிலை திறப்பு விழாவிற்காக சென்னை மாநகராட்சியின் மின்சாரம் திருடப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் புகார் கூறினார்.
மேலும் திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் இந்த விஷயத்தை திமுக தீவிரமாக கையிலெடுத்துள்ளது. இதற்கு திமுக மாவட்ட செயலாளர் அன்பழகன் MLA கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வாட்சாப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்து பேசினால், அமைச்சர் ஜெயக்குமார் மீது எவ்வளவோ பேசலாம். தி.மு.க வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் சிலை தீர்ப்பு விழாவானது முழுவதும் ஜெனெரேட்டர்கள் பயன்படுத்தியே நடைபெற்றது எனவும், இது அனைவருக்கும் தெரியும் எனவும், விழா வெற்றிகரமாக நடைபெற்றதால் அமைச்சர் காழ்ப்புணர்ச்சியில் புகார் தெரிவித்துள்ளதாக அன்பழகன் கூறியுள்ளார்.

English Summary
kalaignar statue power theft issue anbalagan mla slams minister jayakumar