தூங்காமல் இன்ஸ்டா ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்? - அதிரடி காட்டும் மெட்டா.!  - Seithipunal
Seithipunal


மக்கள் ஆண்டிராய்டு செல்போன்களை பயன்படுத்த ஆர்மபித்ததால் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதுமட்டுமல்லாமல், கோவிட்-19 காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. 

அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனேக மக்களுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் என்னும் சிறிய வீடியோக்களை பார்க்கும் பழக்கம் இருந்து வருகிறது. 

அதில், இந்த ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் பலரிடமும் அதிகரித்துள்ளதால் அவர்களது தூக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக மனநல மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், இது போன்ற பழக்கங்களில் இருந்து தங்களது பயனர்களை காப்பதற்காக மெட்டா நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது, இன்ஸ்டாகிராம் செயலியின் புதிய அப்டேட்டில் "நைட் டைம் நட்ஜ்" என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.  இரவு 10 மணிக்கு மேல் ரீல்ஸ் பார்ப்பவர்களுக்கு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எச்சரிக்கை செய்தி வரும் வகையில் புதிய வசதியை உருவாக்கி இருக்கிறது மெட்டா. தங்களது பயனர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புதிய வசதியை உருவாக்கி இருப்பதாக மெட்டா தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

metta company new update in instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->