நித்தியானந்தாவின் கைலாச தர்ம ரட்சகர் விருது பெறப்போகும் திமுக எம்பியின் மகன்! - Seithipunal
Seithipunal


நித்தியானந்தாவிடம் இருந்து விருது பெற போகும் பாஜக பிரமுகர்!

பெங்களூர் மடதியில் நித்தியானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தது, பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட புகார்களுக்கு உள்ளாகி பின்னர் தலைமறைவு ஆனார். 

பிறகு கைலாசா எனும் தனித்தீவை வாங்கி இந்து நாடாக அறிவித்து அங்கேயே குடியேறிவிட்டதாக இணையத்தில் தோன்றி அறிவித்தார். சில நேரங்களில் இணையத்தில் தோன்றி அவர்களின் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்வார்.

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்  திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.

 விஜயதசமி விழாவை முன்னிட்டு கைலாச சார்பில் சூர்யா சிவாவுக்கு விருது வழங்குவதாக நித்தியானந்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்து மதத்தின் புகழை பரப்பி வருவதால் கைலாச தர்மரட்சகர் விருது சூர்யா சிவாவுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூரியா சிவா வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நித்தியானந்தா சுவாமி இடமிருந்து கைலாச தர்மரட்சகர் விருதை பெறுவதில் ஆசீர்வாதமும் மகிழ்ச்சியும் உணர்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nithyananda gives award to BJP Surya Shiva


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->