தமிழில் டுவிட் செய்து ஆச்சரியப்படுத்திய சச்சின் டெண்டுல்கர்.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் இசை புயல் என்று அன்போடு ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் இந்தி, தமிழ் என்று பழமொழிகளில் இசையமைத்து வருகின்றார். சமீபத்தில் இவரது இசையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது. 

இந்த படத்தில் இருந்த அனைத்து பாடல்களுமே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படமானது 500 கோடி வசூல் செய்து வெற்றி பெற ஏ.ஆர்.ரகுமானின் இசை பெருமளவில் உதவியது என்று கூறினால் மிகையாகாது. இதனை தொடர்ந்து, அடுத்ததாக பத்து தல, அயலான், மாமன்னன் உள்ளிட்ட படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். 

இத்தகைய சூழலில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ஏ.ஆர்.ரகுமான் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், "பிரண்ட்ஷிப் கோல்... மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினுடன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் சச்சின் டெண்டுல்கர் இதை ரீட்வீட் செய்து தமிழில் பதிலளித்துள்ளார். ஏ.ஆர் ரகுமானை இசைப்புயல் என்று குறிப்பிட்டு, "எனது ஞாயிற்றுக்கிழமையை அவருடன் செலவழித்தேன்." என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin tweet about ar rahman in tamil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->