சண்டையிடுவதற்காகவே 3 மணி நேரம் ஒதுக்கிய 6 வயது சிறுவன் - வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.!!
six years old boy sheduled 3 hours to fight
சண்டையிடுவதற்காகவே 3 மணி நேரம் ஒதுக்கிய 6 வயது சிறுவன் - வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்.!!
லைபா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ஆறு வயது சிறுவனின் தினசரி வழக்கங்கள் அட்டவணை படி வகைப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கான நேரத்தை நிர்வகிப்பதற்காக சிறுவனின் இந்த செயல் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது.
இருப்பினும் அந்த அட்டவணையில் சிறுவன் ஒதுக்கி உள்ள நேரங்கள் பார்வையாளர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, காலை எழும் நேரத்தில் இருந்து இரவு தூங்குவது வரையிலான செயல்களுக்கு சிறுவன் ஒதுக்கும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அட்டவணையில், அந்த சிறுவன் படிப்பதற்காக மதியம் 2.30 மணி முதல் 2.45 மணி வரை என்று வெறும் 15 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கியுள்ளான். ஆனால் காலை 11.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை சண்டையிடுவதற்கான மூன்று நேரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போல் அந்த சிறுவன் தாத்தா, பாட்டியுடன் மாம்பழம் சாப்பிடுவதற்கு மற்றும் சில வேடிக்கையான விஷயங்களுக்காகவும் நேரத்தை குறிப்பிட்டுள்ளான். இந்த பதிவு ட்விட்டரில் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதுடன், பல்வேறு கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
English Summary
six years old boy sheduled 3 hours to fight