துணிந்து பதிவிட்ட டான்ஜெட்கோவை பணிய வைத்த நெட்டிசன்கள்..!!
TANGEDGO has removed tweets with Thunivu logo
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கும் துணிவு படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தி பட தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. துணிவு படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனம் முழுவீச்சில் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் லோகோவுடன் மின்வாரிய ஊழியர்களை பாராட்டி ட்விட் செய்யப்பட்டது. இந்த பதிவை அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். அதே சமயம் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் திரைப்படத்தினை ப்ரோமோஷன் செய்யும் விதத்தில் பதிவு அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.
இந்த விவகாரம் இணையதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலர் உதயநிதி ஸ்டாலின் படம் என்றால் அரசு நிறுவனத்தை கொண்டு ப்ரொமோட் செய்வீர்களா.? என கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் டான்ஜெட்கோவின் துணிவு லோகோவுடன் கூடிய வாழ்த்து பதிவு தற்பொழுது நீக்கப்பட்டுள்ளது. நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு டான்ஜெட்கோ பணிந்ததாக சிட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
English Summary
TANGEDGO has removed tweets with Thunivu logo