"எலான் மஸ்க் அவர்களே! ரசனைக்கும் இடம் தாருங்கள்" வைரமுத்து வெளியிட்ட ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களுக்கு முழுவதுமாக வாங்கி விட்டார். இதை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் நிறுவனத்தின் சட்டத்துறை தலைவர், தலைமை நிதி அதிகாரி, பொது ஆலோசகர் உள்ளிட்டோரையும் எலான் மஸ்க் பதவியில் இருந்து நீக்கி இருக்கின்றார். இவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது குறித்து ரசிகர்கள் திரை பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

அந்த வரிசையில் கவிஞர் வைரமுத்து தனது கவிதை மூலமாக எலான் மஸ்கிர்க்கு வாழ்த்து தெரிவித்து ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதில், "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே, இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி, இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம் தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

vairamuthu wishes to elon musk


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->