IPL 2025: கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் ஆன அஜிங்க்ய ரஹானே..! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல்., கோல்கட்டா அணிக்கு புதிய கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் போட்டியின் 18வது சீசன் எதிர்வரும் மார்ச் 22-இல் கோல்கட்டாவில் தொடங்கவுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டார். இவரது தலைமையில் கோல்கட்டா அணி, கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பை கைப்பற்றியது.

இருப்பினும் வீரர்கள் 'மெகா' ஏலத்தில், கோல்கட்டா அணியில் இருந்து ஸ்ரேயாஸ் விடுவிக்கப்பட்டார். இவரை, பஞ்சாப் அணி வாங்கியது.

இந்நிலையில் புதிய கேப்டனை தேர்வு செய்ய கோல்கட்டா அணி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, ரகானே, ரிங்கு சிங், வெங்கடேஷ் ஐயர் பெயர்கள் ஆலோசிக்கப்பட்டன. முடிவில் ரஹானே, புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். வீரர்கள் ஏலத்தில் இவரை, ரூ. 1.5 கோடிக்கு கோல்கட்டா அணி வாங்கியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நடந்த சையது முஷ்தாக் அலி 'டி-20' டிராபியில் பேட்டிங்கில் அசத்திய ரஹானே, 09 போட்டியில், 469 ரன் (5 அரைசதம்) குவித்து மும்பை அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார்.  அத்துடன் அந்த போட்டியில் ரஹானே தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

கடந்த 2019-இல் ராஜஸ்தான் அணியில் இருந்து கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பாதியில் விலகியதால், மீதமுள்ள போட்டிகளுக்கு ரஹானே அணியை வழி நடத்தினார். அத்துடன், கடந்த 2020-21-இல் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக செயல்பட்ட இவர், சமீபத்தில் முடிந்த ரஞ்சி கோப்பையில் மும்பை அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றவர்.


அத்துடன், கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக பெரிதும் எதிர்பார்க்கப்படுகிற வெங்கடேஷ் ஐயர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ரஹானே கூறுகையில், ''ஐ.பி.எல்., அரங்கில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால், 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சிப்போம்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ajinkya Rahane is the new captain of the Kolkata team


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->