வெள்ளை நிற சிங்கக்குட்டி.. ஆச்சர்யப்பட வைக்கும் வீடீயோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


காட்டில் வெள்ளை சிங்கக்குட்டி ஒன்று தனது தாய் மற்றும் உடன் பிறந்த மற்ற குட்டிகளுடன் விளையாடுகின்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சாதாரணமாக சிங்கங்கள் வெள்ளை நிறத்தில் இருப்பது இதுவரை பலரும் காணாத ஒரு விஷயமாக தான் இருந்து வருகின்றது. ஆகவே, இந்த வெள்ளை நிற சிங்கக்குட்டியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக துவங்கியுள்ளது.

முயல், பூனை, நாய் என்று வெள்ளை நிறம் மற்ற விலங்குகளில் சாதாரணமாக தான் இருக்கும். வெள்ளை தோலுடன் இருக்கின்ற விலங்குகள் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடர்ந்த காடு ஒன்றில் ஒரு பெண் சிங்கம் கம்பீரமாக இருக்க அதை பின் தொடர்ந்தவாறு ஐந்து சிங்க குட்டிகள் செல்கின்றன.

அதில் நான்கு குட்டிகள் எப்போதும் போல சிங்கத்தின் சாதாரண நிறத்தில் இருக்கின்றன. ஆனால் ஒரு குட்டி மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கின்றது  இது நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது மரபணு குறைப்பாட்டினால் ஏற்ப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

White Lion Video viral 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->