திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல் குறித்து 13 அரிய சுவடிகள் கண்டெடுப்பு! திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நடந்த அதிசியம்! - Seithipunal
Seithipunal


அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், சுமார் 42,020 கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் இருக்கும் அரிய ஓலைச் சுவடிகளை ஒருசேர புதுப்பிக்கும் வேலைக்காக ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, நூலாக்கத் திட்டப் பணி எனும் புதிய திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோயிலில் திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல் சுவடி மற்றும் 13 அரிய சுவடிகளை தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறையின் ஓலைச் சுவடிகள் நூலாக்க திட்டக் குழுவினை சேர்ந்தவர்கள் கண்டெடுத்துள்ளனர்.

சுருணை ஏடுகள் 1,80,612-ம், இலக்கியச் சுவடிக் கட்டுகள் 348 (சுமார் 33,000 ஏடுகள்), தாள் சுவடிகள் 5-ம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஓலைச் சுவடிகள் நூலாக்க திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சு.தாமரைப்பாண்டியன் தெரிவிக்கையில், நெல்லையப்பர் கோயில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், பாதுகாத்து வந்த 10 செப்பு பட்டயங்களை கள ஆய்வு செய்தோம். 

பின்னர் அங்கு இருந்த, கிரந்த எழுத்து வடிவில் அமைந்த வேணுவ நாத ஸ்தல புராணம், சைவ அக்னி காரியம், ஸ்ரீ சக்கர பிரஷ்டா விதி, அபஸ்தம்ப அமரம், ஸ்ரீசக்ர பூஜை, சைவ சந்நியாசி விசயம், வேணுவ நாத லீலா, வைசாக புராணம், சங்காபிஷேக விதி, நித்திய பூஜாவிதி, க்ஷிரா அபிஷேக விதி, சகஸ்த நபணம், என மொத்தம் 12 ஓலைச்சுவடிக் கட்டுகள் கிடைத்தன.

இதைத்தவிர, நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் அருளிய, முதல் மூன்று திருமுறைகள் அடங்கிய தேவாரப் பாடல்கள் அடங்கிய சுவடிகளும் கிடைத்தன. அந்த சுவடியின் முதல் பக்கத்தில் ‘தோடுடைய செவியன்’ எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. 

இதில் இடம்பெற்றுள்ள, எழுத்தமைதி மூலம் சுவடி பிரதி செய்யப்பட்ட காலம் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இந்தச் சுவடியில் மொத்தம் 281 ஏடுகள் உள்ளன. 

சுவடியின் கடைசி பக்கத்தில், ‘திருஞானசம்பந்தரான ஆளுடைய பண்டாரத்தின் மூன்றாம் திருமுறை முழுவதுமாக, திருக்கடைக்காப்பு 383. இதில் பூமிநாத சுவாமி பாதாரவிந்தமே கெதி, நமச்சிவாய மூர்த்தி’ என்ற குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. மேலும் நல்ல நிலையிலுள்ள இந்த சுவடிகளை முழுமையாக ஆய்வு செய்தால் திருஞானசம்பந்தரின் பாடல்களை ஒப்பு நோக்கி, பாடபேதம் நீக்கி செம்பதிப்பு நூலாக கொண்டு வரலாம் என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

13 Rare Traces of Tirunelveli Nellayapar Temple Discovered About Tirunanasambandars Devarapapadal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->