2022 ஆங்கில வருடம் : எந்தெந்த ராசிக்காரர்களுக்கு.. எதில் கவனம் வேண்டும்?
2022 Rashipalankal
நாம் செய்யும் செயல்களின் மூலமே, நம் வாழ்க்கையில் நிகழும் செயல்கள் யாவும் நிர்ணயிக்கப்படுகின்றது.
நவகிரக சுபர்களின் பார்வைகள் இருக்கும்பட்சத்தில் சுப பலன்களை அனுபவிக்க இயலும். அதேபோல் அசுபர்களின் பார்வை இருக்கும்பட்சத்தில் அசுப பலன்களையும் அனுபவிக்க வேண்டிய சூழலும் உண்டாகின்றது.
மேஷம் :
பதறாத காரியம் சிதறாது என்பது போல.... எந்தவொரு செயலிலும் வேகத்தை விட விவேகமாக இருப்பது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
ரிஷபம் :
பத்திரம் தொடர்பான விஷயங்களிலும், மற்றவர்களுக்கு உதவும் பொழுதும், எதிர்காலம் சார்ந்த முதலீடுகளிலும் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
மிதுனம் :
வியாபாரம் சார்ந்த பணிகளிலும், பணியாட்களிடமும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
கடகம் :
வாழ்க்கைத்துணைவரிடத்தில் அனுசரித்தும், பணிபுரியும் இடத்திலும், சக ஊழியர்களிடத்திலும் பொறுமையை கையாளுவது நல்லது.
சிம்மம் :
உத்தியோகம் தொடர்பான செயல்பாடுகளிலும், எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளிலும், நீண்ட நேரம் கண் விழித்து செயல்படுவதிலும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
கன்னி :
பேச்சுக்களில் நிதானத்தையும், எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்தும் செயல்படுதல் அவசியமாகும்.
துலாம் :
வித்தியாசமான சிந்தனைகளை செயல்படுத்தும் பொழுதும், வாக்குறுதிகளை அளிக்கும் பொழுதும், எதிர்காலம் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்ளும் பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விருச்சிகம் :
எண்ணப்போக்கில் கவனமும், உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வதும், கவனக்குறைவான செயல்பாடுகளை குறைத்துக் கொள்வதும் நன்மையை ஏற்படுத்தும்.
தனுசு :
எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் பயணம் சார்ந்த செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
மகரம் :
புதிய முயற்சிகளில் தகுந்த ஆலோசனைகளை பெற்று நெருக்கமானவர்களின் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதும், தொழில் சார்ந்த துறையில் அனுசரித்து செல்வதிலும் கவனம் வேண்டும்.
கும்பம் :
குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடனும், கடன் சார்ந்த விஷயங்களில் நிதானத்துடனும், உயரதிகாரிகளிடம் விவேகத்துடனும் நடந்து கொள்வது நல்லது.
மீனம் :
தனிப்பட்ட சிந்தனைகள் மற்றும் எதிர்காலம் சார்ந்த வியூகங்களை அமைக்கும் பொழுது தகுந்த ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுக்கவும்.
2022ஆம் ஆண்டில் ஆங்கில வருடத்தில் செய்யும் செயல்களில் கவனத்துடன் செயல்படவும். நிகழும் அசுப பலன்களை நம்மால் முழுவதும் தவிர்க்க இயலாது. ஆனால், சில செயல்களின் மூலம் நமக்கு உண்டாகும் தீவினைகளுடைய இன்னல்களின் வீரியத்தை குறைக்க இயலும்.
மேலும், இறை வழிபாட்டிற்கு உண்டான பொருட்கள் வழங்குவதாலும், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதாலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அளிப்பதாலும், பெரியோர்களிடம் ஆசி பெறுவதாலும் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.