ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வேட்டைக்காரன் கோயில் திருவிழாவா!
A temple festival where only men participate Strange temple
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் அருகே உலுப்பக்குடியில் "வேட்டைக்காரன் "என்ற வினோதமான கோவில் உள்ளது. அந்தக் கோவிலில் பலநூறு ஆண்டுகளாக வருடா வருடம் மாசி மாதம் முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா தற்போது நடந்து வருகிறது.
வினோதமானக் கோவில்:
இந்தத் திருவிழாவில் பெண்களான,பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரை யாரையும் பங்கேற்க அனுமதி கொடுக்கப்படுவதில்லை. பெண்கள் அல்லாமல் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்தத் திருவிழாவில்,இந்த ஆண்டிற்கான விழாவையொட்டி திங்கட்கிழமை (நேற்று) இரவு 1 மணிக்குப் பொங்கல் வைத்து வழிபாட்டைத் துவங்கி வைத்தனர்.இதில் மக்களுக்குச் சாப்பாடு அளிக்க 100 மூட்டை அரிசிகள் வந்து இறங்கியது.

ஆண்களுக்கு விருந்து:
மேலும் நேர்த்திக்கடனாகச் செலுத்தப்பட்ட 50 ஆடுகள் உயிர்த் தானம் செய்யப்பட்டு,அதன் இறைச்சியை மக்கள் சமைத்தனர். அதுமட்டுமின்றி நூறு மூட்டை அரிசியும் சாதமாகத் தயாரானது. இந்த இறைச்சி விருந்தைக் கோவிலில் கூடியிருந்த சுமார் 3000 க்கும் மேற்பட்ட ஆண்களுக்கு மட்டுமே பரிமாறப்பட்டது.
பல்வேறு பகுதி:
மேலும் இந்தத் திருவிழாவில் விருந்தில் கலந்து கொண்ட புண்ணாபட்டி,காட்டு வேலம்பட்டி,முலையூர், வேலாயுதம் பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள் கலந்துக் கொண்டனர். பெண்கள் அல்லாமல் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு,விழாவைச் சிறப்பாகவும் உற்சாகத்துடனும் ஆண்கள் கொண்டாடினர். இவ்வினோதமான திருவிழாவைக் கண்டு தமிழகத்தில் உள்ள பலரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
English Summary
A temple festival where only men participate Strange temple