ஆடி மாதத்தில் அன்னை வழிபாடு.!  - Seithipunal
Seithipunal


ஆடி மாதம் என்றாலே கோவில்களில் திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த மாதம் முழுவதும் வீடுகளில் மங்களகரமாக பூஜைகள் நடைபெறும். அதனால், இந்த ஆடி மதம் முழுவதும் அன்னையை வணங்குவது எப்படி? என்று இந்தப் பதிவில் காண்போம்.

ஆடி மாதத்தில் அன்னையை நாம் வணங்குவதால், நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அன்னையின் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.

அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும். உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும். அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது.

இதன் மூலம் அன்னை மகிழ்ச்சி அடைவதால், நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை எந்தவித துன்பமும் இல்லாமல் நிறைவு செய்ய உதவும். அன்னை அனைத்து ஆற்றலையும் பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள்.

அதனை பெற வேண்டும் என்றால், நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும். மனதை அடக்க, அடக்க மாயை விலகி சக்தி பிறக்கும். அதற்கு இந்த ஆடி மாத வழிபாடு மிகச் சிறந்த அஸ்திவாரமாக இருக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annai vazhipadu in aadi month


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->