மயிலிறகை வீட்டில் வைத்திருந்தால் நடக்கும் அதிசயம்.! வெறும் அழகு மட்டுமல்ல.!
benefits of mayiliragu on home
மயிலின் இறகு என்பது அழகு சார்ந்தது மட்டுமல்ல. ஆன்மீகம் சார்ந்த விஷயம். இந்து புராணங்களின்படி மயிலிறகு கிருஷ்ணருடன் தொடர்புடையது என்பதாலும், முருகப் பெருமானின் வாகனம் என்பதாலும் பல நேர்மறையான அதிர்வுகளை கொண்டதாக கருதப்படுகிறது.
சிலரின் வீடுகளிலும், வியாபாரம் செய்யும் இடங்களிலும் மயிலிறகை கண்டிருப்போம். செல்வ வளத்தைக் குறிக்கும் குறியீடாக மயிலிறகு கருதப்படுகிறது. ஒருமுறை இந்திரனுக்கும், ராவணனுக்கும் போர் நிகழ்ந்துள்ளது. அப்போது மயில் ஒன்று பரந்து விரிந்த தாகவும் அதன்பின் இந்திரன் மறைந்ததாகவும் போர் முடிவுக்கு வந்ததாகவும் கூறப்பட்டது.
தக்க சமயத்தில் தனக்கு உதவிய மயிலுக்கு வரம் அளிக்கும் விதமாக இறகுகளுக்கு சிறப்பு வல்லமைகளை இந்திரன் வழங்கினான் என்று கூறப்படுகிறது. மேலும், லட்சுமியின் அம்சமாகவும் கருதப்படுகிறது. எனவே, வீட்டில் மயிலிறகை வைத்திருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அறிவியல் ரீதியாக மயிலிறகை வீடுகளில் வைப்பதால் வீட்டிற்குள் தேவையில்லாத பூச்சிகள் நுழைவதை தடுக்கிறது. மயில் பாதுகாப்பு பறவையாக கருதப்படுகிறது. எனவே, பிற துன்பங்களில் இருந்து மனிதர்களை காக்கும் நல்ல அதிர்வுகள் மயிலிறகு கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
மயிலிறகை கண்டால் மனக்குறை நீங்கி மன அமைதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மயிலிறகு செல்வத்தை மட்டும் அல்லாமல் காணும் போது மன உளைச்சலை நீக்கும். மனதிற்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடிய சக்தி கொண்டது என்றும் கூறப்படுகிறது.
English Summary
benefits of mayiliragu on home