நந்தியில் இருந்து வடியும் ரத்தம் - அதிர்ச்சியை ஏற்படுத்திய அதிசய கோவில்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் இலங்குடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அதிசய சிவன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலின் வாசலில் நந்தி சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நந்தி சிலையிலிருந்து இரத்தம் போன்ற திரவம் வடிந்து கொண்டே உள்ளது. இதை பார்ப்பதற்கு ரத்தம் போன்றும், தொட்டுப் பார்த்தால் எண்ணெயிலான திரவம் போன்றும் இருக்கும். இந்த திரவத்தை கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நெற்றியிலும் பூசி கொள்கின்றனர்.

இதற்கிடையே இந்த நந்தி சிலையை அதன் இடத்திலிருந்து ஒரு அடி தள்ளி வைத்தும் இந்த சிலையில் இருந்து திரவம் வடிவது மட்டும் நிற்கவில்லை. இதன் காரணம் என்னவென்று ஆராய்ச்சியாளர்களுக்கும் குழப்பமாகவே உள்ளது. 

மேலும், இந்த திரவத்தை நெற்றியில் பூசிக்கொள்ளும் பக்தர்கள் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுள் வாழ்வார்கள் என்பது இந்தக் கோயிலின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

blood come in sivakangai temple nandhi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->