திருப்பதியில் உலாவரும் சிறுத்தை - பக்தர்களுக்கு தேவஸ்தானம் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதைகளில் நடந்து செல்கின்றனர். அதன் படி கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த கெளசிக் என்ற 4 வயது சிறுவன் பெற்றோருடன் திருப்பதி நடைபாதையில் சென்று கொண்டிருந்த போது அவரை சிறுத்தை ஒன்று கவ்விச் சென்றது.

உடனே அந்த சிறுவன் மீட்கப்பட்டு ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான். இதற்கிடையே வனத்துறையினர் கௌசிக்கை தாக்கிய சிறுத்தையை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டில் இரண்டு வயது கொண்ட சிறுத்தை ஒன்று பிடிபட்டது. 

இதே போன்று கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி சிறுமி லக்ஷிதாவை சிறுத்தை தூக்கிச் சென்று கடித்துக் குதறியதில் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இரண்டு நடைபாதைகளில் உள்ள வனப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் கூண்டு அமைக்கப்பட்டு இதுவரைக்கும் 4 சிறுத்தைகள் பிடிபட்டன. 

இந்த நிலையில், நடைபாதையில் மீண்டும் சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளதாக தேவஸ்தானம் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்கு குறிப்பில், "திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் அலிபிரி மலைப்பாதையில் இந்த மாதம் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை மற்றும் கரடி நடந்து செல்வது வனத்துறை கேமராவில் பதிவானது. 

ஆகவே, நடைபாதையில் பக்தர்கள் விழிப்புடன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பக்தர்கள் குழுவாகச் சேர்ந்து செல்ல வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cheetah leopard again walk in tirupati hills


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->