மாசி மாத பூஜை : சபரிமலையில் 12 ஆம் தேதி நடை திறப்பு.! - Seithipunal
Seithipunal


சபரிமலையில் 2022-2023-ம் ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு சீசன் கடந்த மாதம் 20-ந்தேதி நிறைவடைந்தது. இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலில் மாசி மாத பூஜைக்காக வருகிற 12-ந்தேதி நடை திறக்கப்பட்டு, ஐந்து நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக தளர்த்தப்பட்டதால் கடந்த சீசனில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். 

இதன்மூலம், கோவில் தேவஸ்தானத்திற்கு ரூ.380 கோடி வருமானம் கிடைத்தது. இருப்பினும், சன்னிதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த காணிக்கை பெட்டிகளில் உள்ள காணிக்கை இன்னும் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது. 

அவற்றை எண்ணுவதற்காக, தேவஸ்தானத்தின் சார்பில் 540 ஊழியர்கள் கொண்ட குழு சன்னிதானத்திற்கு சென்றுள்ளது. அதன் படி, ரூ.18 கோடி அளவிற்கு காணிக்கை பணம் குவிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

கோவிலில், மாசி மாத பூஜைக்காக நடை திறப்பதற்கு முன்பு காணிக்கையாக கிடைத்த நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 12th sabarimalai gate open for maasi pooja


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->