ஆடி மாத பூஜை - சபரிமலை கோவில் நடை திறப்பு - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் புகழ் பெற்றவை. அதேபோல ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களிலும், விஷூ, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திரம் திருவிழா உள்ளிட்ட நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.

இந்த நிலையில், ஆடி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை, வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இந்த நடை திறப்பையொட்டி, அன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறும்.

இதையடுத்து 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஐந்து நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜை வழிபாடுகள் நடை பெறுகிறது. 20-ந் தேதி வரை சில சிறப்பு பூஜைகளும் நடைபெறும். அனைத்தும் நிறைவடைந்தவுடன் இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப் படுவார்கள் என்று தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 15 sabarimalai door open for aadi month poojai


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->