16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த 31 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை..! - Seithipunal
Seithipunal


16 வயது சிறுமியை திருமணம் செய்தவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சிறுமியின் தந்தை, அத்தை ஆகியோருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கயத்தார் பகுதியைச் சேர்ந்த 31 வயதான விவசாயி ஜானகிராமன் என்பவர்  புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். 

இந்த திருமணத்திற்கு உடந்தையாக சிறுமியின் தந்தை, உறவினர்களான தனலட்சுமி, லட்சுமி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இருந்துள்ளனர். இந்நிலையில், சிறுமியை ஜானகிராமன் அடித்து துன்புறுத்தியுள்ளார். அதையடுத்து சிறுமி தரப்பில் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

போலீஸார் விசாரணையில் சிறுமிக்கு சட்ட விரோதமாக திருமணம் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. அதையடுத்து போக்சோ பிரிவின் கீழ் ஜானகிராமன் உள்ளிட்ட 05 பேர் மீது வழக்கு பதிவுசெய்து போலீசார் கைது செய்துள்ளனர். 

குறித்த வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடந்தது. விசாரணை முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட ஜானகிராமனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.

அத்துடன்,, ஜானகிராமனின் பெற்றோர், பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, அத்தை ஆகிய 04 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் புதுவை அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

31 year old man who forced a 16 year old girl to marry gets 20 years in prison


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->