பெங்களூரில் நான்கு பேரால் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை! பெரும் அதிர்ச்சி பின்னணி!
Bangalore Young lady Harassment
பெங்களூரில், 33 வயதான பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியை சேர்ந்த இப்பெண், பெங்களூரில் கேட்டரிங் தொழிலில் பணியாற்றி வருகிறார். ஒரு கல்லூரி நிகழ்வில் அவருடன் பழகிய வட மாநிலங்களை சேர்ந்த நான்கு பேர், விருந்துக்காக நேற்று இரவு அவரை ஹோட்டலுக்கு அழைத்துள்ளனர்.
ஹோட்டலில் பெண்ணை சந்தித்த அவர்கள், அங்கிருந்தபோதே பாலியல் வன்கொடுமை செய்து, இன்று காலை அவரை விடுவித்துள்ளனர்.
உடனே அந்த இளம்பெண் காவல்துறையினரை அணுகி தனக்கு நடந்த கொடூரத்தை விவரித்து புகார் அளித்துள்ளார்.
புகாரையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் 20 வயதுக்குட்பட்ட அவர்களில் மூவர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள், மற்றொருவர் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இவர்களால் வேறு பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து விசாரணை முடிவில் வெளியாகும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Bangalore Young lady Harassment