துலாம் ராசிக்காரர்களா நீங்கள்..? நிர்வாக திறமையில் நீங்கள் எப்படிப்பட்டவர் தெரியுமா? - Seithipunal
Seithipunal


12 ராசிகளில் 07 வது ராசி துலாம். ராசியின் ஆபத்து சுக்ரன். இவர் அழகு, கலை உணர்ச்சி போன்றவற்றுக்கு அதிபதி. இவர் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருப்பதால், மற்றவர்களை விடவும் நீங்கள் அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.அதோடு, மற்றவர்களிடம் எந்த வேறுபாடும் பார்க்காமல், மனிதநேயத்துடன் பழகு கூடியவர்கள்.

நீதி தேவன் என்று வர்ணிக்கப்படும் சனி பகவான், துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்குக் நீங்கள் கட்டுப்படுவீர்கள். அதே இடத்தில் சூரியன் நீசம் அடைவதால், நாட்டு நிர்வாகத்தில் நீங்கள் திறமை இருந்தாலும், வீட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை நீங்கள் பூஜ்யம் என்றுதான் சொல்ல முடியும். 

துலாம் ராசியின் 02-க்கும், 07-க்கும் அதிபதியாக செவ்வாய் வருகிறது. உங்கள் மனதில் தோன்றுவதைப் பேசுவீர்கள். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லத் தெரியாமல் விழிக்க கூடியவர்கள். அதே நேரம் பொய் சொல்ல கூடியவர்களும் கூட. உங்கள் பொறுப்பு களை எப்போதும் வாழ்க்கைத் துணையிடம் ஒப்படைத்து விடுவீர்கள். 

உங்கள் ராசியின் அதிபதி சுக்கிரன் என்பதால், திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள்; பண்டிதர் களுக்கும் ஆலோசனை கூறுவீர்கள். பெரும்பாலும், கூட்டுத் தொழில் செய்வதையே விரும்புவீர்கள் நீங்கள். 

அத்துடன் நீங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் உடன்பிறந்தவர்களுக்கு சாமர்த்தியமாக உதவுவீர்கள். 06-ஆம் இடமான எதிரி ஸ்தானத்துக்கு குரு அதிபதியாக இருப்பதால், உங்களுக்கான எதிரிகள் வெளியில் இல்லை. உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. 

துலாம் ராசிக்காரர்களுக்கு அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு அதிகம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் எப்போதும் கொண்டிருப்பீர்கள்.

ராசிக்கு 10-ஆம் இடத்துக்கு சந்திரன் வருகிறார். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்துக்கு உரியவராகவும் வருவதால், அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்தாள் இருப்பாக இருக்கும். எதிலுமே வசீகரமும், கற்பனையும் இருக்கவேண்டுமென்று விரும்ப கூடியவர்கள் ண்ணேகால்,பெருஞ் செல்வத்தை அதிகம் நீங்கள் விரும்புவீர்கள். 

ஏற்கெனவே செல்வம் பெற்றிருப்பவர்கள் நீங்கள். அதனுடன் தெய்வீக அருளையும் பெற்றால், அவர்களின் வாழ்க்கை மேலும் மேன்மை அடையும். துலாம் ராசிக்காரர்களாகிய நீங்கள் அதற்காக செல்லவேண்டிய தலம், நூற்றெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோளூர் திருத்தலம். துலாம் ராசிக்காரர்கள் இத்தலத்துக்குச் சென்றுவர, பெருமாளின் அருளுடன் செல்வ வளம் பெறுவர் என்பது நம்பிக்கை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Common characteristics of Libra people


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->