ஆடி மாதத்தில் சுப காரியங்கள் நடத்தாதது.. புதுமணத் தம்பதியரை பிரித்து வைப்பதன் காரணம் தெரியுமா..?! - Seithipunal
Seithipunal



தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் மாதம் முழுவதும் வரும் அனைத்து நாட்களுமே மிகவும் விசேஷமானதாகும். மாதம் முழுவதும் விரதங்கள், விசேஷ பூஜைகள், வழிபாடுகள் என்று மிகவும் மங்களகரமான மாதமாக இருக்கும். இருப்பினும் ஆடி மாதத்தில், திருமணம் உள்ளிட்ட எந்த சுபகாரியங்களும் நடத்தப் படுவதில்லை. 

அதேபோல் புதிதாகத் திருமணமான தம்பதியரையும் அவர்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று   பிரித்து வைத்து விடுவார்கள். அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்வோம். ஆடி மாதம் முழுவதும் கடவுளைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்கக் கூடாது என்பதாலேயே, புதிதாகத் திருமணம் ஆனவர்கள் தாம்பத்தியம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஆடி மாதம் தொடங்கியதும், பெண்ணை தாய் வீட்டிற்கு அனுப்பும் பழக்கம் இன்றும் கிராமப் புறங்களில் உள்ளது. 

இதற்கு ஆடி மாதத்தில் தம்பதிகள் கூடினால், கத்திரி வெயில் காலமான சித்திரையில் குழந்தை பிறக்கும் என்றும், அது குழ்நதைக்கும், தாய்க்கும் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் கிராமங்களில் கூறுகிறார்கள். மேலும் அவர்கள் கைகளில் காப்பு கட்டி, அம்மனுக்கு விரதம் இருந்து வழிபடுவார்கள். எனவே அந்த நேரத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்பதாலும் முன்னோர்கள் இப்படி ஒரு விதியை கடைபிடித்து வந்தனர். 

மேலும் சுப காரியங்கள் நடத்த செலவு அதிகமாகும். விவசாயத்திற்கு ஒதுக்கி வைத்துள்ள பணத்தை இது போல் சுபகாரியங்களுக்கு செலவழித்து விடக் கூடாது என்றும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப் படும் என்றும் கருதியே முன்னோர்கள் ஆடி மாதத்தில் எந்த சுப காரியமும் செய்யக் கூடாது என்று கூறியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do You Know The Reasons Of Newly Married Couples Seperated in Aadi Month


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->