ALERT: கருங்காலி போலியானதா என்பதை தெரிஞ்சுக்கணுமா..?இதைப் படிங்க..!! - Seithipunal
Seithipunal



ராசிக்கல் மோதிரங்கள், ருத்திராட்ச மாலை என்று ஆன்மீகத் தொடர்புடைய பல விதமான பொருட்களை வாங்கி அணிவதன் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு தொல்லைகள், உடல் உபாதைகள், குடும்ப பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று மக்கள் நம்புகின்றனர். 

அந்த வகையில் தற்போது கருங்காலி மாலை களத்தில் இறங்கியுள்ளது. இந்த கருங்காலி இருக்குமிடத்தில் அபரிமிதமான தெய்வீக சக்தி இருக்கும். செல்வம் பெருகும் என்று நம்பப் படுகிறது. எனவே இந்த கருங்காலியில் மாலை செய்து அணிவது, கருங்காலி மரக் குச்சியை பூஜையறையில் வைத்து வழிபடுவது நல்லது என்று கருதப்படுகிறது. 

இத்தகைய தெய்வீக சக்தி நிறைந்த கருங்காலியை அனைவரும் அணிய முடியாது. திருவாதிரை, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை,  திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமே இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நன்மை பெற முடியும்.

அதேபோல் போலி கருங்காலி மாலை அணிவதால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். அது போலியா என்று கண்டுபிடிக்க கருங்காலி மாலையை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்தால், மரத்தின் சாறு தண்ணீரில் இறங்கி, பழுப்பு நிறமான எண்ணெய்ப் படலமாக தண்ணீரின் மேல்புறத்தில் மிதக்கும். அப்படி மாறாவிட்டால் அது போலி என்பதை அறியலாம். 

அதேபோல் கருங்காலியில் உள்ள ஒரு உருளையை பிளந்து பார்ப்பதன் மூலமும் அது உண்மையானது தானா அல்லது போலியானதா என்பதை அறியலாம். 

இந்த கருங்காலியானது முருகனுக்கு உகந்தது என்றும், செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் பெற்றதாகவும் கருதப்படுகிறது. எனவே இதை அணிவதால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து, செவ்வாயின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do You Want To Know How to Find Duplicate Karungali Alias Ebony


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->