கடன் கொடுக்கும்போது மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!
Dont forget mistakes giving lending money
பொதுவாக பணத்தை கொடுக்கும் பொழுது தெற்கு திசை பார்த்தபடி கொடுக்கக் கூடாது. அப்படி கொடுத்தால் பணத்தை மீண்டும் பெற முடியாமல் போய்விடும். கடனாக பணத்தை கொடுக்கும் பொழுது வடக்கு திசையை நோக்கி தான் கொடுக்க வேண்டும்.
பலன் பெறுபவர் மேற்கு திசையை பார்த்து கடனை பெற்றால் மருத்துவ செலவிற்கு பணம் எல்லாம் செலவாகிவிடும். இதனால் இந்த தவறை செய்யக்கூடாது.
பொதுவாக பணத்தை எண்ணும் பொழுது எச்சில் தொட்டு எண்ணுவது வழக்கம். ஆனால் அப்படி செய்தால் மகாலட்சுமி தாயாரின் கோபத்திற்கு ஆளாகி விடுவோம்.
எச்சிலை தொட்டு பணம் எண்ணுவது மகாலட்சுமி தாயாரை அவமானப்படுத்துவதற்கு சமம். இதனால் பண பிரச்சனையை சந்திக்க கூடும்.
வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் யாரிடமும் பணம் கொடுக்கக் கூடாது. பலரும் கடனை வாங்கி அதனை திருப்பி தர முடியவில்லை என புலம்புவது உண்டு.
அதனை சரி செய்ய செவ்வாய்க்கிழமை நாட்களில் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்தால் கடன் பிரச்சனை விரைவில் சரி ஆகும்.
English Summary
Dont forget mistakes giving lending money